Homeசெய்திகள்சினிமா'மார்க் ஆண்டனி' படம் பண்ணுவதற்கு அவர் தான் காரணம்.... அஜித் குறித்து ஆதிக்!

‘மார்க் ஆண்டனி’ படம் பண்ணுவதற்கு அவர் தான் காரணம்…. அஜித் குறித்து ஆதிக்!

-

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படம் பண்ணுவதற்கு அஜித் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.'மார்க் ஆண்டனி' படம் பண்ணுவதற்கு அவர் தான் காரணம்.... அஜித் குறித்து ஆதிக்!

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் இவர், அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குறித்து பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசியதாவது, “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றும்போது அஜித் சார் என்னிடம் ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டார். அந்த நேரத்தில்தான் நான் ஆரம்பகட்டத்தில் இருந்தேன். எனவே நான் யோசித்தேன். ஆனால் நான் மார்க் ஆண்டனி படத்தை இயக்க அஜித் சார் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அந்த படத்தை நான் எடுக்க அஜித் சார் தான் காரணம். மார்க் ஆண்டனி படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே அஜித்தை இயக்குவது முடிவானது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ