பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில் ராமாயணத்தை தழுவி உருவாக்கப்பட்ட ஆதிபுரூஷ் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. டி சீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் பட குழுவினர் 10,000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர். சுமார் 500 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியானது.
ஆனால் இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் சைப் அலிகானின் தோற்றம் சிறிதளவு கூட பொருந்தவில்லை என்றும் இப்படத்தில் காட்டப்படும் வானரக் கூட்டங்கள் ஹாலிவுட் படங்களில் காணப்படும் கொரில்லாக்களைப் போல கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இவ்வாறு பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வரும் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் மாபெரும் வசூலை பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த படம் இந்தியா முழுவதும் 90 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.