தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். இவர் பிரபல இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஆவார். கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படத்திலும் அவர் நாயகியாக நடித்திருந்தார். அப்படத்தில் பத்திரிகையாளராக நடித்து புகழ் பெற்றார் அதிதி ஷங்கர். நடிப்பு மட்டுமன்றி நடனம், பாடல் என அனைத்து துறைகளிலும் அவர் கலக்கி வருகிறார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் மற்றும் பல திரைப்டங்களில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, மருத்துவருக்கு படித்துள்ள அதிதி ஷங்கர், டாக்டர் வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். டாக்டர் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதிதி ஷங்கர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பு முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.