Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

-

லால் சலாம் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநரும் ஆவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரைத்துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டப்பிங் பணிகள் மற்றும் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது லால் சலாம் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால் நடித்துள்ள இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ