Homeசெய்திகள்சினிமாராஜஸ்தானிலிருந்து டெல்லி பறந்தது தக் லைஃப் படக்குழு... கமல்ஹாசன் பங்கேற்பு... ராஜஸ்தானிலிருந்து டெல்லி பறந்தது தக் லைஃப் படக்குழு… கமல்ஹாசன் பங்கேற்பு…
- Advertisement -
ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த தக் லைஃப் படக்குழு, தற்போது டெல்லி பறந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே, தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்படத்திசற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் இத்திரைப்படத்தில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு இடைவெளிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தபடப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அவர் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படக்குழு டெல்லி பறந்துள்ளது. அங்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. தேர்தல் காரணமாக அவர் இத்தனை நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.