spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"நான் இறந்துட்டேன்னா நீ நடிகன கல்யாணம் பண்ணிக்காத"... மருத்துவமனையில் உருகிய நடிகர் பாலா!

“நான் இறந்துட்டேன்னா நீ நடிகன கல்யாணம் பண்ணிக்காத”… மருத்துவமனையில் உருகிய நடிகர் பாலா!

-

- Advertisement -

நடிகர் பாலா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரனான பாலா 2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

we-r-hiring

அதையடுத்து மலையாளப் படங்களில் அதிகம் தோன்றினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்திலும் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார்.

bala
bala

தற்போது நடிகர் பாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தி மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போதும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், தனது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடிய அவர்,

“இன்னும் 2 அல்லது 3 நாட்களில் எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன்.

 

உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் நான் இங்கு இருக்கிறேன். இந்த அறுவை சிகிச்சையின் போது மரணம் கூட ஏற்படலாம். அதே சமயம் உங்கள் பிரார்த்தனையால் நான் பிழைக்கவும் வாய்ப்புள்ளது. நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது 2-வது திருமண நாள். என் மனைவி எலிசபெத் இந்த நாளை கொண்டாட விரும்பினார்.” என்று தெரிவித்தார்.

மேலும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்து நீ ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே, டாக்டரை திருமணம் செய்துகொள் என்றும் தெரிவித்துள்ளார். எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வீடியோ ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ