Homeசெய்திகள்சினிமாகன்னட நடிகையின் டீப் ஃபேக் வீடியோ... இணையத்தில் பரபரப்பு...

கன்னட நடிகையின் டீப் ஃபேக் வீடியோ… இணையத்தில் பரபரப்பு…

-

- Advertisement -
  
AI தொழில்நுட்பம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானது என்று டெஸ்லா நிறுவனரும், டிவிட்டர் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த AI தொழில்நுட்பம் மூலம் ஒருவர் முகத்திற்கு பதிலாக மற்றொருவர் முகத்தை வைத்து உருமாற்றம் செய்யலாம். இது டீப் ஃபேக் என்று அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அண்மைக் காலத்தில் தவறான பாதையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிரபல நடிகைகளையும், சாதாரண பெண்களையும் போலியாக ஆபசமாக சித்தரித்து இணையத்தில் வீடியோ வெளியிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததன் மூலம் இந்த பிரச்சனை தொடங்கியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அடுத்து அலியா பட், பிரியங்கா சோப்ரா, கஜோல் என பல நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரபல கன்னட நடிகை வைஷ்ணவி கவுடாவின் புகைப்படங்களையும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் ஆபசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, இது தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்

MUST READ