spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிடுதலையால் வந்த அசுர வெற்றி... கதாநாயகனாக உருவெடுக்கும் சூரி!

விடுதலையால் வந்த அசுர வெற்றி… கதாநாயகனாக உருவெடுக்கும் சூரி!

-

- Advertisement -

நடிகர் சூரி 5- க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்கள் மற்றும் படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் தென்பட்டு வந்த சூரி அதையடுத்து ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமாக கவனம் பெற ஆரம்பித்தார்.

we-r-hiring
soori
soori

பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சூரி தனது தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின்  மனதை வென்றுள்ளார்.

விடுதலை படத்தில் ஒரு இடத்தில் கூட காமெடியன் சூரியை நாம் பார்க்க முடியவில்லை. அந்த காவலர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். சூரியின்  நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சூரி மேலும் 5 படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி  இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கம் கொட்டு காளி படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் அதை எடுத்து ஏழு கடல் ஏழுமலை என்ற படத்திலும்  கதாநாயகனாக நடிக்கும் அவர் அதையடுத்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன், துரை செந்தில் குமார் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறாராம். இன்னும் சில படங்களிலும் அவர் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

MUST READ