ஏஜென்ட் படம் தோல்வி குறித்து நடிகர் அகில் அக்கினேனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக அகில் அக்கினேனி கடின பயிற்சிகள் மேற்கொண்டு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு போஸ்டர்களில் மாஸ் காட்டினார்.
ஏஜென்ட் படம் மக்கள் வரவேற்பைப் பெற தவறியது. படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் நடிகர் அகில் அக்கினேனி படத்தின் தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“எனது நலம் விரும்பிகளுக்கும் எனது அன்பான ரசிகர்களுக்கும் நான் எனது படத்தின் நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இந்த படத்தை கொண்டு வர தங்கள் உயிரை கொடுத்து உழைத்தற்காக நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வழியில் படம் வெளி வரவில்லை மேலும் உங்களுக்காக நாங்கள் நல்ல படத்தை கொடுக்கவில்லை. எனது தயாரிப்பாளர்கள் எனது பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எங்களது படத்தை நம்பிய பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவின் காரணமாகவே இந்த படத்தை என்னால் கொடுக்க முடிந்தது. உங்களுக்கு என் மனதின் அடியில் இருந்து நன்றி சொல்கிறேன். என்னை நம்புவர்களுக்காக மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார்