- Advertisement -
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிவதாக தொடர்ந்து வதந்திகள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்திருக்கும் வீடியோ வெளியானது.
உலக அழகி பட்டத்துடன் இந்திய சினிமாவில் ஐஸ்வர்யா ராய் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்தியில் பல்வேறு நாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய்.
