Homeசெய்திகள்சினிமாவிக்ரமின் துருவ நட்சத்திரம்...... திடீரென நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள்!

விக்ரமின் துருவ நட்சத்திரம்…… திடீரென நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள்!

-

விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒரு சில காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். அதாவது துருவா, ஜான், ஜோஸ்வா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் முன்னதாகவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து  ஒரு மனம் என்ற முதல் பாடலும் வெளியானது.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தின் ஹிஸ் நேம் இஸ் ஜான் என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விக்ரம் உடன் இணைந்து ராதிகா சரத்குமார், சிம்ரன், ரித்து வர்மா, திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்று 4 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் இப்படத்தில் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹிஸ் நேம் இஸ் ஜான் பாடலுடன் வெளியாகி உள்ள நடிகர்கள் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் நீக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் இதனால் துருவ நட்சத்திரம் படக்கதையிலும் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ