Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் வளையம்... இன்று படப்பிடிப்பு தொடக்கம்...

ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் வளையம்… இன்று படப்பிடிப்பு தொடக்கம்…

-

வெளி மாநிலங்களைச் சேர்ந்த வௌ்ளைச் சருமத்திற்கு மத்தியில், நிலத்தின் நிறத்தில் இருந்து பாகுபாடுகளை கடந்து பவர்புல் நாயகியாக உருவெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவரது திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை. இப்படத்தின் வெற்றி அவரை முன்னனி நாயகியாக உயர்த்தியது. இதையடுத்து, வட சென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை, கனா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

கமர்ஷியல் நடிகையாக இல்லாமல், சிறந்த கதாபாத்திரத்தை வழங்கும் நடிகையாக அவர் திகழ்ந்தார். ஃபர்ஹானா, தீராத காதல், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பனசுந்தரி போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவரது நடிப்பில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்திற்கு வளையம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. மனோபாரதி இயக்கும் இப்படத்தை டில்லிபாபு தயாரிக்கிறார். இதில் தேவ் என்ற புதுமுக நாயகன் அறிமுகமாகிறார். மேலும், சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி , சுரேஷ்மேனன் உள்பட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார். இந்நிலையில், வளையம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

MUST READ