Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக உருவாகும் அஜித் - தனுஷ் கூட்டணியின் புதிய படம்!

பிரம்மாண்டமாக உருவாகும் அஜித் – தனுஷ் கூட்டணியின் புதிய படம்!

-

- Advertisement -

அஜித் – தனுஷ் கூட்டணியின் புதிய படம் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.பிரம்மாண்டமாக உருவாகும் அஜித் - தனுஷ் கூட்டணியின் புதிய படம்!

அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை திரையில் கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையப்போகிறார் என சொல்லப்படுகிறது. இது தவிர அஜித்தின் லைன் அப்பில் விஷ்ணுவரதன், வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களும் இருக்கிறார்கள் என தகவல் வெளியாக வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரம்மாண்டமாக உருவாகும் அஜித் - தனுஷ் கூட்டணியின் புதிய படம்!அதுமட்டுமில்லாமல் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரனும் சமீபத்தில் கடந்த பேட்டியில் அஜித் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அஜித் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருவதால் அவர் சென்னை திரும்பியவுடன் அஜித் – தனுஷின் புதிய படம் தொடங்கும் என நம்பப்படுகிறது.

MUST READ