Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகரை போட்டோ எடுக்கும் அஜித்.... வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகரை போட்டோ எடுக்கும் அஜித்…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதை அடுத்து நடிகர் அஜித் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். பிரபல நடிகரை போட்டோ எடுக்கும் அஜித்.... வைரலாகும் புகைப்படம்!இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் நடிகர் அஜித் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அஜித்தின் 63வது படமான இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரபல நடிகரை போட்டோ எடுக்கும் அஜித்.... வைரலாகும் புகைப்படம்!அதே சமயம் நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கார், பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்வார். அதன்படி சமீபத்தில் நடிகர் அஜித் பைக் ஓட்டும் வீடியோ, காரில் பறக்கும் வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் படப்பிடிப்பு தளத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் அஜித், நடிகர் ஆரவ் – ஐ புகைப்படம் எடுக்கிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

MUST READ