Homeசெய்திகள்சினிமாதுபாயில் குடும்பத்துடன் நடுக்கடலில் உலா... அஜித்தின் வீடியோ வைரல்..

துபாயில் குடும்பத்துடன் நடுக்கடலில் உலா… அஜித்தின் வீடியோ வைரல்..

-

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடப்பு ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் தொடங்கினர்.இதற்காக, விடாமுயற்சி படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அண்மையில் சென்னை திரும்பியது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படக்குழு வெளிநாடு திரும்பியது
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது துபாயில் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்போது பிரம்மாண்ட போட் ஒன்றில் அஜித் தன் குடும்பத்துடன் செல்ல அதை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்திலும் அஜித்தை பார்த்துவிட்டு தல என கூச்சலிட்டு வீடியோ எடுத்து இருக்கின்றனர். அஜித்தும் கை அசைத்து தன் அன்பை வெளிக்காட்டி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ