spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் கிளாசிக் பில்லா... திரையரங்குகளில் ரீ ரிலீஸ்....

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

-

- Advertisement -
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பில்லா. இது ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். ரீமேக் திரைப்படமாக இருந்தாலும், இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து, வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இரு்தார். இதில் அஜித் நாயகனாக நடித்த, நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான், சந்தானம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

we-r-hiring
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நீரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பில்லா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2 படத்தையும் எடுத்து வெளியிட்டனர். ஆனால், பில்லா 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாமல், தோல்வியைத் தழுவியது. இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மிக கிளாமராக நடித்திருந்தார். இத்திரைப்படம் நயன்தாராவுக்கும் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்தது.

 

 

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மே 1-ம் தேதி பில்லா திரையரங்குகளில் ரி ரிலீஸ் ஆகிறது. இதனால் தல ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ