- Advertisement -
அஜித்தின் திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த பில்லா திரைப்படத்தின் மறு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோலிவுட் ரசிகர்களால் தல என்றும் ஏ.கே. என்றும் கொண்டாடப்படும் நாயகன் அஜித்குமார். 90-களில்தொடங்கிய அவரது திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. அவரது திரைப் பயணத்தில் பல படங்கள் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதில் கிளாசிக்கான, மாஸ் திரைப்படம் என்றால் அது பில்லா. கடந்த 2007-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பில்லா. இது ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். ரீமேக் திரைப்படமாக இருந்தாலும், இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து, வெற்றிப்படமாக அமைந்தது.


இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இரு்தார். இதில் அஜித் நாயகனாக நடித்த, நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான், சந்தானம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நீரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பில்லா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.



