- Advertisement -
ஐதராபாத்தில் ஒரே இடத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சிரஞ்சீவியும், நடிகர் அஜித்குமாரும் சந்தித்துக் கொண்டனர்.


நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஆரவ், அர்ஜூன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். திரைப்படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.



