கில்லிக்கு போட்டியாக களமிறங்கும் மங்காத்தா… ரி ரிலீஸிலும் மோதல்…
- Advertisement -
அஜித்குமார் நடிப்பில் வௌியாகி சக்கைப்போடு போட்ட மங்காத்தா திரைப்படம், மறுவெளியீடு செய்யப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வௌியாகி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் விசில் அடிக்க வைத்த திரைப்படம் மங்காத்தா. இதில் அஜித்குமார் நாயகனாக நடித்திருந்தார். படத்தில் அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி, வைபவ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மங்காத்தா திரைப்படம் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமில்லாமல், அஜித்குமாரின் திரை வாழ்விலும் ஒரு பெரிய மைல் கல்லாக அமைந்தது. படம் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது, இது மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.

படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தூள் கிளப்பின. குறிப்பாக படத்தில் அமைந்த அனைத்து பிஜிஎம்களும் ஹிட் அடித்தன. சினிமாவில் ஒரு சில படங்களின் தோல்வியால் பின்னடைவு அடைந்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. படத்தில் அஜித்தின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது. நாயகனாக கொண்டாடப்பட்ட அஜித்குமார், இப்படத்தில் வில்லனாக கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில், மங்காத்தா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. வரும் மே மாதம் 1-ம் தேதி படம் ரி ரிலீஸ் ஆகிறது. விஜய் நடித்த கில்லிபடமும் வரும் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால், மறுவெளியீட்டின்போதும் அஜித் மற்றும் விஜய் இருவரின் இரு ஹிட் படங்களும் மோதுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.