Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் 'குட் பேட் அக்லி'.... இந்த தேதியில் தான் தொடங்குகிறது!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…. இந்த தேதியில் தான் தொடங்குகிறது!

-

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அஜித்தின் 'குட் பேட் அக்லி'.... இந்த தேதியில் தான் தொடங்குகிறது!அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி அஜித், ஆதிக் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் படத்தின் தலைப்பை பார்க்கையில் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பானது 2024 ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அஜித்தின் 'குட் பேட் அக்லி'.... இந்த தேதியில் தான் தொடங்குகிறது!அதன்படி ஜூன் 13ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறதாம். அதற்கான செட் ஒர்க் ஈவிபியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பட குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பை சீனா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற பகுதிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

MUST READ