Homeசெய்திகள்சினிமாராஷ்மிகா பிறந்தநாளில் 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ராஷ்மிகா பிறந்தநாளில் ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

- Advertisement -

ராஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள் ஃப்ரெண்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.ராஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள் ஃப்ரெண்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கடந்த 2016 இல் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தன்னுடைய நடிப்பினாலும் முகபாவனையினாலும் இளைஞர்களின் நேஷனல் க்ரஷாக வலம் வருகிறார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இவர் கடைசியாக ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் தி கேர்ள் ஃப்ரெண்ட் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா. இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள் ஃப்ரெண்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!ஹேஸம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

MUST READ