spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் டென்ஷனை குறைத்த 'விடாமுயற்சி' படக்குழு...... க்ரீன் சிக்னல் காட்டிய ஹீரோ!

அஜித்தின் டென்ஷனை குறைத்த ‘விடாமுயற்சி’ படக்குழு…… க்ரீன் சிக்னல் காட்டிய ஹீரோ!

-

- Advertisement -

அஜித், தற்போது தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்தின் டென்ஷனை குறைத்த 'விடாமுயற்சி' படக்குழு...... க்ரீன் சிக்னல் காட்டிய ஹீரோ!லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்றது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% மட்டும்தான் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அஜித்தின் டென்ஷனை குறைத்த 'விடாமுயற்சி' படக்குழு...... க்ரீன் சிக்னல் காட்டிய ஹீரோ! இருப்பினும் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படம் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் படப்பிடிப்பு மிகவும் தாமதமாக செல்வதாகவும் விடாமுயற்சி படத்தின் பட்ஜெட் அதிகமாகிக்கொண்டே போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். ஏகே 63 படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படம் தாமதமாவது அஜித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் டென்ஷனை குறைத்த 'விடாமுயற்சி' படக்குழு...... க்ரீன் சிக்னல் காட்டிய ஹீரோ!இந்நிலையில் தான் விடாமுயற்சி பட குழுவினர் அஜித்திடம் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து காட்டியுள்ளனராம். அதைப் பார்த்த அஜித் படம் நன்றாக வந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ஆகவே விடாமுயற்சியின் மீதம் இருக்கும் படப்பிடிப்பை முடிப்பதற்கு இன்னும் 30 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம் அஜித். மேலும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ