Homeசெய்திகள்சினிமாகிராமி விருது பெற்ற பிரபல இசைக் கலைஞர் மரணம்!

கிராமி விருது பெற்ற பிரபல இசைக் கலைஞர் மரணம்!

-

கிராமி விருது வென்ற பிரபல இசை கலைஞர் ஸ்டீவ் லாரன்ஸ் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.கிராமி விருது வென்ற பிரபல இசைக் கலைஞர் மரணம்!

லாரன்ஸ் மற்றும் கோர்மே ஆகிய இருவரும் ஒரு குழுவாக ரசிகர்களுக்கு பரீட்சமானவர்கள். இருவரும் இணைந்து 1960 க்கு முன்னரே வெகு சில நாட்களிலேயே தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை திரட்டி வெற்றி கண்டவர்கள். இவர்களின் நடிப்பு ஒரு பக்கம் ரசிகர்களை கவர அவர மறுபக்கம் இவர்களின் இசைக் கலையும் பிரபலமானது. இவர்கள் இருவரும் இணைந்து நைட் கிளப்ஸ், லாஸ் வேகாஸ் போன்ற மேடைகளில் தங்களது நடிப்பு கலையை வெளிப்படுத்தி புகழின் உச்சத்தை தொட்டனர். இருவரும் ஜார்ஜ் கேர்ஸ்வின், கோல் போர்ட்டர் போன்ற பாடல் ஆசிரியர்களிடமிருந்து உத்வேகம் பெற்றவர்கள். எல்விஸ் ப்ரஸ்லி போன்ற ராக் இசை முன்னோடிகள் வானொலி மற்றும் பதிவுகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சமயத்தில் ஸ்டீவ் லாரன்ஸ் மற்றும் அவரது மனைவியும் தங்கள் ஸ்டைலை மாற்றி பாடல்களைப் பாடி விற்கத் தொடங்கினர்.கிராமி விருது வென்ற பிரபல இசைக் கலைஞர் மரணம்!

மேலும் இசை உலகின் உயரிய விருதான கிராமி விருது வென்றவர் என்ற பெருமையும் லாரன்ஸ் ஐ சேரும். இந்நிலையில் தான் 88 வயதுடைய இவர் அல்சைமர் நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இவர் உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ