Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் செம வைரலாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட போஸ்டர்கள்!

இணையத்தில் செம வைரலாகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட போஸ்டர்கள்!

-

- Advertisement -

அஜித், துணிவு படத்திற்கு பிறகு தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் , ரெஜினா போன்றோர் நடித்து வருகின்றனர். இணையத்தில் செம வைரலாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட போஸ்டர்கள்!இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். இணையத்தில் செம வைரலாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட போஸ்டர்கள்!ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அஜர்பைஜானில் மீதமுள்ள 30 சதவீத படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீவிரமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக விடாமுயற்சி பட குழு ஐதராபாத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இணையத்தில் செம வைரலாகும் அஜித்தின் 'விடாமுயற்சி' பட போஸ்டர்கள்! அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், அதாவது இரண்டு புதிய போஸ்டர்களை படக் குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மிகவும் ஸ்டைலான லுக்கில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு செமையா வைரலாகி வருகின்றன.

MUST READ