- Advertisement -
இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தமிழ்த் திரையுலகம் சார்பில், பெப்சி, நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களுடன் ஒன்றிணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாககக் கொண்டாட முடிவு செய்தனர். அடுத்த மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை வெள்ள பாதிப்பால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸில் இந்த விழா நடக்க இருக்கிறது.




