மகளுக்காக புத்தகம் எழுதிய பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்
- Advertisement -
பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.
இந்த நட்சத்திர ஜோடிக்கு ராகா என்ற பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் பிசியான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வருகிறார்
இந்நிலையில், நடிகை அலியா பட் தனது மகள் ராகாவுக்காக, The Adventures of Ed-a-Mamma: Ed Finds A Home என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அலியா பட், தான் புத்தக வாசிப்பாளரே கிடையாது, ஆனால் தற்போது என் மகளுக்காக ஒரு நாளில் குறைந்தது 3 புத்தகங்கள் வாசிக்கிறேன் என்று கூறினார்.