அலியா பட் நடித்துள்ள ஜிக்ரா… வெளியீட்டு தேதி அறிவிப்பு…
- Advertisement -
பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். தனது 19 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய அலியா பட், இன்று இந்தி திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.
பெண் குழந்தைக்கு தாயான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். இதைத் தொடர்ந்து ஹாலிவுட்டுக்கும் சென்ற அலியா பட், அங்கு ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், தற்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார். சினிமா மட்டுமன்றி, ஃபேஷன் துறையிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அலியா பட் தற்போது ஜிக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தர்மா புரொடக்சன்ஸ் தயாரிள்ள இத்திரைப்படத்தை வாசன் பாலா இயக்கி இருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இத்திரைப்படம் வெௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.