ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டர் வழக்கில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரும், ‘புஷ்பா 2’ நடிகருமான அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 4 ஆம் தேதி படம் திரையிடப்பட்டபோது தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, இதில் 35 வயது பெண் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘புஷ்பா-2’ படத்தின் புரமோஷனுக்காக அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை சந்திக்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு சென்றனர். அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது முன்பே அவர்களுக்கு தெரியாது. ஆனால் பெரும் கூட்டம் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது. கூட்டத்தில் மிதிபட்டு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்தார். இந்த சோகச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. https://x.com/TV9Telugu/status/1867466902932795787
விபத்து நடந்ததில் இருந்து அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார். அல்லு அர்ஜுன் அந்தக் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.