Homeசெய்திகள்சினிமாஅமீர் நடிக்கும் 'உயிர் தமிழுக்கு'..... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’….. ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

-

அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அமீர் நடிக்கும் 'உயிர் தமிழுக்கு'..... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். இவரின் முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ராம், பருத்திவீரன் போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் அமீர். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் கடந்த 2009 இல் யோகி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் வட சென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் மாயவலை என்னும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அமீர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ள உயிர் தமிழுக்கு எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேவராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.அமீர் நடிக்கும் 'உயிர் தமிழுக்கு'..... ட்ரைலர் குறித்த அறிவிப்பு! அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள படத்தில் அமீருடன் இணைந்து இமான் அண்ணாச்சி, ஸ்ரீதரன், சாந்தினி, சுப்பிரமணிய சிவா, மாரிமுத்து, சரவண சக்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதன் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் 2024 மே மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் அந்த அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ