spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமன்னா, ராஷி கண்ணாவின் அசத்தலான நடனத்தில் 'அரண்மனை 4' முதல் பாடல் வெளியீடு!

தமன்னா, ராஷி கண்ணாவின் அசத்தலான நடனத்தில் ‘அரண்மனை 4’ முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, அரண்மனை 1,2,3 ஆகிய காமெடி – ஹாரர் திரில்லர் படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.தமன்னா, ராஷி கண்ணாவின் அசத்தலான நடனத்தில் 'அரண்மனை 4' முதல் பாடல் வெளியீடு! அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனி கதையாக வெளியானது. அதைப் போல தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்புவின் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தமன்னா, ராஷி கண்ணாவின் அசத்தலான நடனத்தில் 'அரண்மனை 4' முதல் பாடல் வெளியீடு! சுந்தர் சி இந்த படத்தில் தமன்னாவிற்கு அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து கடந்த 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட அரண்மனை 4 படமானது 2024 ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதேசமயம் இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் அச்சச்சோ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ