spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமிதாப்பச்சனுடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி - புகைப்படம் வைரல்

அமிதாப்பச்சனுடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி – புகைப்படம் வைரல்

-

- Advertisement -
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து எல்.ஜி.எம். படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பட தயாரிப்பிலும் தோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, புது ஹேர்டைலுடன் தோனி வலம் வரும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.

இந்நிலையில், மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாலிவுட்டின் உச்ச நடிகர் அமிதாப் பச்சன் நேரில் சந்தித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் அமிதாப் பச்சன் இளஞ்சிவப்பு நிற குர்த்தாவும், தோனி ஜீன்ஸ், டி-சர்ட்டும் அணிந்துள்ளனர். பல்வேறு படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் அமிதாப் பச்சன், தோனியை சந்தித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கு முன்பாக, கடந்த 17-ம தேதி நடிகர் ராம் சரணும், ரன்வீர் கபூரும் அதே இடத்தில் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

MUST READ