தனுஷின் 54ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் தனுஷ், தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திரைக்கு வர உள்ளது. இது தவிர தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார்.
அதன்படி இந்த படமானது தனுஷின் 54ஆவது படமாக உருவாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (10.07.2025) தொடங்குவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்காலிகமாக D54 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை