கல்கி 2898AD திரைப்படம் உருவான விதம் குறித்து படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் பேசியிருக்கும் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படம் கல்கி 2898ஏடி. இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இத்திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தான் கல்கி. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு உதவும் நண்பராக புஜ்ஜி என்ற ரோபோ கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு பிரபல தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கல்கி திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
An epic journey into the future with Director @nagashwin7…
Presenting Episode 1 – The Prelude of #Kalki2898AD in English. #Kalki2898ADonJune27 pic.twitter.com/3nKtqvi6q7
— Kalki 2898 AD (@Kalki2898AD) June 18, 2024