தேரே இஷ்க் மெய்ன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட்டிலும் களமிறங்கி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா (அம்பிகாபதி), அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த புதிய படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கலர் எல்லோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (நவம்பர் 14) மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


