- Advertisement -
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரும் ஆவார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்தது. நிச்சய நிகழ்ச்சியே வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெரிய பெரிய நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் 12-ம தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு 3 மாதங்கள் உள்ள நிலையில், குஜராத்தில் ஜாம் நகரில் திருமண கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தில் கலந்து கொள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.




