நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் ட்ரோன் தாக்குதல், பாகிஸ்தான் ஏவுகணை போன்றவற்றை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இவ்வாறு இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “போர் முடிவுக்கு வரும். தலைவர்கள் கைகுலுக்கி கொள்வார்கள். அந்தத் தாய் தனது தியாக மகனுக்காக காத்திருப்பாள். அந்தப் பெண் அன்பான கணவருக்காக காத்திருப்பாள்.
குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காக காத்திருப்பார்கள். நம் தாயகத்தை விற்றவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு விலை கொடுத்தவர்களை நான் கண்டேன்” என்று பாலஸ்தீன கவிஞர் மஹமத் தர்வீஷ் எழுதிய கவிதையை பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.