Homeசெய்திகள்சினிமாதனுஷ் படத்தில் இணைந்த அனிகா சுரேந்திரன்.... வெளியான புதிய தகவல்!

தனுஷ் படத்தில் இணைந்த அனிகா சுரேந்திரன்…. வெளியான புதிய தகவல்!

-

தனுஷின் 50வது படத்தில் மற்றொரு நடிகை இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தலைப்பிடப்படாத D50 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுசுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் சென்னையின் பிரம்மாண்டமான செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்காக தனுஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக வடசென்னையில் நடைபெறுவது போன்று உருவாக்கப்படுகிறது. அத்துடன் தனுஷின் படப்பிடிப்போம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, நடிகை அனிகா சுரேந்திரன் D50 இல் இணைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
அனிகா சுரேந்திரன் என்னை அறிந்தால், மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது இவர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தனுஷின் ஐம்பதாவது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ