தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இசை அமைப்பாளர்கள் உள்ளனர். அதில் முன்னணி இசையமைப்பாளர்களா சிலரே ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இசை எனும் உலகில் முடிசூட மன்னராக வலம் வருகிறார் ராக்ஸ்டார் அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர்.
எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், தங்க மகன், ரெமோ, என ஆண்டிற்கு அவரது இசையில் கிட்டத்தட்ட 10 படங்களாவது வெளியாகிவிடும். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஞானவேலின் வேட்டையன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கு இசை அமைக்கிறார்.
https://x.com/i/status/1800893232941019139