spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாலிவுட்டில் அறிமுகமாகும் அனிருத்... யாருடைய படத்தில் தெரியுமா?

மாலிவுட்டில் அறிமுகமாகும் அனிருத்… யாருடைய படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்து பெற்றிருக்கிறார்.
அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

we-r-hiring

இவ்வாறு மிகப் பிரபலமாகவும் பிசியாகவும் இருக்கும் அனிருத் தற்போது மலையாளத் திரையுலகில், இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரித்திவிராஜ் இயக்கி, நடிக்கும் ‘டைசன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்று தற்போதைய தகவலில் தெரிய வந்துள்ளது.

MUST READ