spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜவான் படத்திற்காக இரண்டு விருதுகள் வென்ற ராக்ஸ்டார்

ஜவான் படத்திற்காக இரண்டு விருதுகள் வென்ற ராக்ஸ்டார்

-

- Advertisement -
ஜவான் படதிற்கு இசை அமைத்த பிரபல இசையமைப்பாளர் அனிருத், இரண்டு ஜீ விருதுகளை பெற்றுள்ளார்.

அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

we-r-hiring
அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்து பெற்றிருக்கிறார். அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தற்போது இசை அமைத்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் தன் இசையால் திரும்பிப் பார்க்க வைத்தார் அனிருத்.

பாலிவுட் பிரவேசத்திற்கு பிறகு அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழி படங்களுக்கும் தற்போது அவர் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் ஜீ சினிமா விருது விழாவில் ஜவான் படத்திற்காக அனிருத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசைக்காகவும் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

MUST READ