Homeசெய்திகள்சினிமாசங்கர் ஸ்டைலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பாடல் .... 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்!

சங்கர் ஸ்டைலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பாடல் …. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் புதிய அப்டேட்!

-

- Advertisement -
kadalkanni

கேம் சேஞ்சர் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். இவர் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.சங்கர் ஸ்டைலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பாடல் .... 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்! அதே சமயம் இவர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அரசியல் தொடர்பான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தில் ராம் சரண் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்தது இந்த படத்தில் நடிகர் ராம் சரண் மூன்று விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஏற்கனவே முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த இரண்டு பாடல்களிலுமே பிரம்மாண்டங்கள் காட்டப்பட்டிருந்தன.சங்கர் ஸ்டைலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பாடல் .... 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்! இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய பாடல் ஒன்று வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். எனவே போஸ்டரை பார்க்கும்போது இந்த மூன்றாவது பாடலும் சங்கர் ஸ்டைலில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ