ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் கடந்தாண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து வெளியான லப்பர் பந்து திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இதற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார் ஹரிஷ் கல்யாண். அதன்படி கடந்த சில தினங்களாகவே கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுவரை இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

நடிகை ப்ரீத்தி முகுந்தன், கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


