நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தாலும் இப்படமானது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சூர்யா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் பட குழுவினர் வெளியிட்டு வந்தனர். கடந்தாண்டு ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
100 days to go for the King’s arrival 👑
Brace yourselves 🔥
For #Kanguva 🦅#KanguvaFromOct10 🗡️@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions @PenMovies #PenMarudhar… pic.twitter.com/3g2C0WaJ9L— Studio Green (@StudioGreen2) July 2, 2024
அதைத் தொடர்ந்து டீசரும் வெளியானது. எனவே கங்குவா திரைப்படம் ரிலீஸாக இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு சூர்யாவின் 49 வது பிறந்தநாளுக்கு பட குழுவினர் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க இருக்கின்றனர். அதாவது கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடித்த வரும் சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.