Homeசெய்திகள்சினிமாஷாருக்கானுக்கு வில்லனாகும் மற்றுமொரு தமிழ் நடிகர்!

ஷாருக்கானுக்கு வில்லனாகும் மற்றுமொரு தமிழ் நடிகர்!

-

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அதே சமயம் இவர் தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார். ஷாருக்கானுக்கு வில்லனாகும் மற்றுமொரு தமிழ் நடிகர்!அந்த வகையில் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தமிழிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷாருக்கான் கடைசியாக டங்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக இவர் நடித்திருந்த பதான், ஜவான் போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. எனவே ஒவ்வொரு முறையும் ஷாருக்கான் தன்னை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்து வருகிறார். அத்துடன் தற்போது கிங் எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் ஷாருக்கான். இந்த படத்தை சுஜோய் கோஷ் இயக்குகிறார். இதில் ஷாருக்கானின் மகள் சுஹானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. ஷாருக்கானுக்கு வில்லனாகும் மற்றுமொரு தமிழ் நடிகர்!மேலும் இதன் படப்பிடிப்புகள் 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா ஷாருக்கானின் கிங் திரைப்படத்தில் வில்லனாக களமிறங்க இருக்கிறார். நடிகர் எஸ் ஜே சூர்யா அறிமுகமாகும் பாலிவுட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ