spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயுவன், ரியோ ராஜ் கூட்டணியின் புதிய படம்.... டைட்டில் இது தான்!

யுவன், ரியோ ராஜ் கூட்டணியின் புதிய படம்…. டைட்டில் இது தான்!

-

- Advertisement -

யுவன், ரியோ ராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.யுவன், ரியோ ராஜ் கூட்டணியின் புதிய படம்.... டைட்டில் இது தான்!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இசைஞானியை போல் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் இவர் திரைத்துறையில் பாடகராவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக யுவன் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கோபிகா ரமேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டு வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

அதன்படி இப்படத்திற்கு ஸ்வீட் ஹார்ட் (Sweet Heart) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை பார்க்கும் போது இந்த படம் ரொமான்டிக் காதல் ட்ராமாவாக இருக்கும் போல் தெரிகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு வெளியான ஜோ படத்திற்கு பிறகு நடிகர் ரியோ ராஜ், பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ