Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரம் படத்திற்காக இணையும் இரு பெரும் நிறுவனங்கள்... வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

துருவ் விக்ரம் படத்திற்காக இணையும் இரு பெரும் நிறுவனங்கள்… வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

-

- Advertisement -
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இத்திரைபப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவர் இறுதியாக உதயநிதி இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து வாழை என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். புதுமுக சிறுவர்களை வைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வாழை படத்தை எடுத்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இப்படம், அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும், போர்த்தொழில் படத்தை தயாரித்த அப்லாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. மேலும், படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ