spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅனிருத்துக்கு ஒரு வேண்டுகோள்..... 'காதலிக்க நேரமில்லை' பட விழாவில் ஏ.ஆர். ரகுமான் பேச்சு!

அனிருத்துக்கு ஒரு வேண்டுகோள்….. ‘காதலிக்க நேரமில்லை’ பட விழாவில் ஏ.ஆர். ரகுமான் பேச்சு!

-

- Advertisement -

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளர் அனிருத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அனிருத்துக்கு ஒரு வேண்டுகோள்..... 'காதலிக்க நேரமில்லை' பட விழாவில் ஏ.ஆர். ரகுமான் பேச்சு!இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவரது இசையில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படமும் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. எனவே நேற்று (ஜனவரி 7) இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஏ.ஆர். ரகுமான், இசையமைப்பாளர் அனிருத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, “அனிருத்தின் இசை நன்றாக இருக்கிறது. பல பெரிய படங்களுக்கு ஹிட் கொடுக்கிறார். சினிமாவில் பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் நிலைத்து நிற்பது திறமை இல்லாமல் நடக்காது. உங்களுடைய வெற்றிக்கு பாராட்டுக்கள். அதேபோல் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு அதில் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை செய்தால் இளம் தலைமுறையினர்களுக்கு அந்த இசை போய் சேரும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ