- Advertisement -
இன்று ஓடிடி தளத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 
கடந்த மே மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி 25 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில், கோவை சரளா, யோகி பாபு, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

அதேபோல, ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் திரைப்படமும் பிரைம் தளத்தில் வௌியாகி இருக்கிறது. கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே 24-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.




