Homeசெய்திகள்சினிமாலட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆர் யூ ஓகே பேபி'..... மனதை உருக வைக்கும் முதல் பாடல் வெளியீடு!

லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆர் யூ ஓகே பேபி’….. மனதை உருக வைக்கும் முதல் பாடல் வெளியீடு!

-

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் அபிராமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன் மிஸ்கின், வினோதினி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது இசைஞானி இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அதே களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஆர் யூ ஓகே பேபி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. அன்னை தந்தை எனத் தொடங்கும் இந்த முதல் பாடலை இசைஞானி இளையராஜா எழுதியுள்ள நிலையில் ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இந்த பாடல் மனதை உருக வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவின் படைப்பில் வெளியாகி உள்ள இந்த மெலோடி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் மனதை நெகிழ வைத்துள்ளது.

MUST READ