- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இரண்டு இளம் நடிகர்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம். தமிழில் அர்ஜூன் தாஸின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். . தற்போது அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் போர்.

இப்படத்தை டேவிட் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கி இருக்கிறார். டி சீரிஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராமை வைத்தும் இந்தியில் ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்தும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு இந்தியில் டங்கே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், போர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.




